Kanguva: சூர்யாவையும் விடாத வில்லன் ஆசை... கங்குவா ரிலீஸ் தேதியில் குழப்பம்... இது என்ன சோதனை..?
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கங்குவா ரிலீஸ் தேதியிலும் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
சூர்யாவை விடாத வில்லன் ஆசை: சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் தான் தியேட்டரில் வெளியானது. இந்தப் படமும் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தை சூர்யா உட்பட அவரது ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

இதுவரை பீரியட் ஜானர் படங்களில் நடித்தது இல்லை என்ற குறையை கங்குவா மூலம் சூர்யா தீர்த்துக்கொள்வார் எனத் தெரிகிறது. இந்தப் படம் 30 சதவீதம் மட்டுமே இப்போதைய காலக்கட்டத்தில் நடப்பதாக இருக்குமாம். மீதமுள்ள 70 சதவீதம் முழுக்க ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பக்கா பீரியட் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இதுவரை பார்க்காத விண்டேஜ் ஸ்டைல் சூர்யாவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அதேநேரம் சூர்யாவின் கேரக்டர் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா ஹீரோவாகவும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கிடைத்துள்ள தகவலின் படி, சூர்யாவே நெகட்டிவ் ஷேடில் வில்லன் ரோலில் தான் நடித்துள்ளாராம். இது கொடூரமான நெகட்டிவ் ஷேட் கேரக்டர் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் கங்குவா படத்தில் ரொம்பவே வித்தியாசமான சூர்யாவை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், கங்குவா ஏப்ரலில் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சூர்யா நடித்துள்ள சண்டைக் காட்சிகள் ஹை-ரிஸ்க் மோடில் ஷூட் செய்யப்பட்டுள்ளதாம். அதனால் ஆக்ஷன் சீன்ஸ் உட்பட படத்தின் 70 சதவீதம் பகுதிகள் கிராபிக்ஸ் செய்ய வேண்டி உள்ளதாம். எனவே இப்போதைக்கு கங்குவா ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா 3டி, ஐமேக்ஸில் வெளியாகவுள்ளது.
முதலில் 10 மொழிகளில் வெளியாகும் என சொல்லப்பட்ட கங்குவா, இப்போது 38 மொழிகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா கேரியர் மட்டுமின்றி கோலிவுட்டிலும் கங்குவா சிறப்பான சம்பவமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











