சூர்யாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் கங்குவா டீம்... அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?

கொடைக்கானல்: சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 வாரங்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.

இதனால், சூர்யாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய கங்குவா டீம், அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

 Kanguva: Suriyas Kanguva Film Kodaikanal schedule is Wrapped Up Today

கங்குவா டீம் கொடுத்த அடுத்த அப்டேட்:சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. சூர்யாவின் முதல் 3டி திரைப்படமாக உருவாகும் கங்குவா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கங்குவா படத்தின் படப்பிடிப்பு கோவா, இலங்கை பகுதிகளில் நடைபெற்றது. பேண்டசியான ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகி வருவதால், கடற்கரை ஏரியாவிலும் ஹில்ஸ் பகுதிகளில் மட்டும் இந்தப் படத்தின் காட்சிகளை ஷூட் செய்து வருகிறாராம் சிறுத்தை சிவா. பழமையான கட்டடங்கள், மின் கம்பங்கள் இல்லாத பகுதிகள் என பார்த்து பார்த்து படமாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் சூர்யா நடித்து வருவதால், உடல் எடையை கூட்டியும் குறைத்தும் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார். இதற்காக பிட்னஸ், ஜிம் ஒர்க்அவுட் என அனைத்துவிதமாகவும் சூர்யா வேகம் கொடுத்து வருகிறாராம். இதனிடையே கங்குவா படப்பிடிப்பு கடந்த 22 நாட்களாக கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த ஷெட்யூல் முடிய லேட்டாகும் என படக்குழு நினைத்திருந்ததாம்.

 Kanguva: Suriyas Kanguva Film Kodaikanal schedule is Wrapped Up Today

ஆனால், சூர்யாவின் வேகமும் அர்ப்பணிப்பும் கொடைக்கானல் சென்ற வேகத்தில் படப்பிடிப்பை முடிக்க உதவியுள்ளது. இதனால், கொடைக்கானல் ஷெட்யூலை 22 நாட்களில் முடித்துவிட்டு சென்னை திரும்ப ரெடியாகிவிட்டதாம் கங்குவா படக்குழு. இதனை கங்குவா படத்தின் ஸ்டண்ட் கோரியோகிராபர் சுப்ரிம் சுந்தர் போட்டோவுடன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் சூர்யா, சிறுத்தை சிவா, ஆர்ட் டைரக்டர் மிலன் பெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்தப் போட்டோவில் சூர்யாவின் லுக் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சூர்யாவின் வலது கண் புருவமும் இடது கண் புருவமும் பாதி டிரிம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு கண்களிலும் பாதி புருவத்துடன் அரக்கன் லுக்கில் இருக்கும் சூர்யாவின் இந்த போட்டோ, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. கங்குவா டைட்டில் அறிவிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து விரைவில் டீசரும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X