வாடிவாசல் ட்ராப் ஆகும் விரக்தியில் சூர்யா... சைடு கேப்பில் சிவா கொடுத்த ஷாக்...கங்குவா நிலை இதுதான்
சென்னை: சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படம் ட்ராப் ஆகும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே கங்குவா படத்தில் இருந்தும் சூர்யாவுக்கு ஒரு ஷாக்கிங் அப்டேட் கொடுத்துள்ளார் சிறுத்தை சிவா.

சூர்யாவின் கங்குவா அப்டேட்:சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தை சிவா இயக்கி வருகிறார். சூர்யா - சிவா கூட்டணியில் முதல் படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 3டி டெக்னாலஜி, ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பேண்டசியான படம் என கங்குவா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு கோவாவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இலங்கை, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலும் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்றது. சூர்யா, திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியையும் சிவா ஷூட் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படத்தில் இணைந்துவிடலாம் என நினைத்திருந்தார் சூர்யா. ஆனால், விடுதலை 2 படத்தின் ரீ-ஷூட்டிங் இன்னும் முடியாததால் வாடிவாசலின் படப்பிடிப்பும் லேட்டாக தொடங்கும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் வாடிவாசல் ட்ராப் ஆகிவிடும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் நடிகர் சூர்யாவே மிகவும் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் பண்ணலாம் எனவும் சூர்யா முடிவெடுத்துள்ளாராம். இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் வாடிவாசல் ட்ராப் ஆகும் நிலையில் இருப்பதால் விரக்தியில் இருக்கும் சூர்யாவுக்கு, கங்குவா இயக்குநர் சிவா ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது கங்குவா படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை எடிட் செய்து வருகிறாராம் சிவா.
இந்த ஸ்பெஷல் ப்ரோமோவை ஜூலை மாதம் வெளியிடலாம் எனவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே இதுகுறித்து தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஆனால், அதன்பின்னர் கங்குவா டைட்டில் அப்டேட் மட்டுமே வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஸ்பெஷல் ப்ரோமோ ரிலீஸாகவுள்ளதாம். இந்த ப்ரோமோவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கங்குவா திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











