Kanguva: சூர்யாவின் புது லுக்... கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்த லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை: சூர்யாவின் 42வது படத்துக்கு கங்குவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பல கட்டங்களாக நடந்து வருகிறது.
சில நாட்கள் பிரேக் விடப்பட்டிருந்த கங்குவா ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூர்யாவின் புதிய லுக்குடன் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் புது லுக்:முதன்முறையாக இணைந்துள்ள சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணி, முதல் படத்திலேயே செம்ம மாஸ் காட்டி வருகிறது. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இதற்கு கங்குவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 42 படத்தின் அறிவிப்பையே தரமான மோஷன் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி, கங்குவா பேண்டசியான ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகி வருவது உறுதியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் இப்படியொரு படம் இதுவரை வந்ததே இல்லை என்ற முத்திரையையும் பதிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கோவா, இலங்கை போன்ற பகுதிகளில் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதற்கு தற்போது கங்குவா படக்குழுவினரிடம் இருந்து விடை கிடைத்துள்ளது. கங்குவா ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ள சூர்யா, ஆர்ட் டைரக்டர் மிலன் பெர்னாண்டஸ் உடன் போட்டோ எடுத்துள்ளார். இருவரும் க்யூட்டாக சிரித்தபடி எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

முக்கியமாக இந்தப் போட்டோவில் சூர்யாவின் லுக் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சூர்யாவின் வலது கண் புருவம் பாதி டிரிம் செய்யப்பட்டுள்ளது. பாதி கண் புருவத்துடன் அரக்கன் லுக்கில் இருக்கும் சூர்யாவின் இந்த போட்டோ, அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. கங்குவா படத்தில் சூர்யா ஒன்றுக்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தற்போது வெளியான போட்டோவை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக செம்ம ஃபிட்னஸாக வலம் வந்த சூர்யா, கடந்த சில தினங்களாக வெயிட் போட்டு வித்தியாசமாக இருந்தார். ஆனால், மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து பிட்னஸ் மோடுக்கும் திரும்பும் சூர்யாவின் வீடியோ நேற்று வெளியாகியிருந்தது. கங்குவா படத்திற்காக விரைவில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை எடுக்க சிறுத்தை சிவா பிளான் செய்துள்ளதாகவும், அதற்காகவே சூர்யா பிட்னஸில் கவனம் செலுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











