Kanguva: அடுத்தடுத்து கங்குவா அப்டேட்... வெளியானது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்... நெக்ஸ்ட் என்ன..?

சென்னை: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

மிரட்டலாக வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 Kanguva: Suriyas first look poster released from Kanguva Film

வெளியானது சூர்யா ஃபர்ஸ்ட் லுக்: சூர்யாவின் கேரியரில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாக கங்குவா அப்டேட்ஸ் கொடுத்து வருகிறது படக்குழு. தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி வந்த நிலையில், இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது. மிரட்டலான மேக்கிங்கில் வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாகியுள்ள கங்குவா க்ளிம்ப்ஸ், சூர்யா ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதேநேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேபோல், வழக்கமான சில ட்ரோல்களும் கங்குவா க்ளிம்ப்ஸ்ஸை டிவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்துள்ளது.

 Kanguva: Suriyas first look poster released from Kanguva Film

இந்நிலையில், தற்போது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. குதிரையில் வாள் ஏந்தியபடி செம்ம மாஸ் காட்டுகிறார் சூர்யா. க்ளிம்ப்ஸ் வீடியோவில் நடிப்பில் தெறிக்கவிட்ட சூர்யா, இந்த போஸ்டரிலும் டெரர் லுக்கில் ஸ்கோர் செய்துள்ளார். ஆக்‌ஷன் ப்ளஸ் ஃபேண்டசி ஜானரில் பீரியட் படமாக உருவாகும் கங்குவா, தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்டத்தில் உள்ள கங்குவா படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னரே கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமாம். அதேபோல், ரிலீஸ் தேதியையும் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அறிவிக்கலாம் என கங்குவா படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால், இப்போதைக்கு கங்குவா க்ளிம்ப்ஸ், சூர்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே அப்டேட் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X