Kanguva: ரிலீஸ் தேதி கிடைக்காமல் திணறும் கங்குவா... குழப்பத்தில் படக்குழு... அப்செட்டான சூர்யா

சென்னை: சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது.

சூர்யாவுடன் திஷா பதானி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் கங்குவா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி கிடைக்காமல் திணறி வருகிறதாம்.

 Kanguva: Suriyas Kanguva Are Planning To Release The Film On A Massive Scale On April 2024

ரிலீஸ் தேதி கிடைக்காமல் திணறும் கங்குவா: சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பம் உட்பட டெக்னிக்கலாகவும் செம்ம மிரட்டலாக உருவாகி வருகிறது கங்குவா.

சூர்யாவின் 42வது படமான இதன் டைட்டில் சில வாரங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டது. அதன்படி கங்குவா என்ற இந்த டைட்டில், 'நெருப்பு' என்பதன் பின்னணியில் வைக்கப்பட்டுள்ளதாம். சூர்யாவின் கெட்டப், கேரக்டர் உட்பட அனைத்துமே புதுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கங்குவா டைட்டிலை தொடர்ந்து வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழுவினர் பிளான் செய்திருந்தனர். ஏற்கனவே இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்குப் போட்டியாக கங்குவா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கமல் - ஷங்கர் காம்போவில் உருவாகும் இந்தியன் 2ம் பாகமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், இந்தியன் 2 ரிலீஸ் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக இருக்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சூர்யாவின் கங்குவா படமும் பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் எடிட்டிங், கிராபிக்ஸ், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு பல மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

இதனால், இப்போது கங்குவா படமும் 2024 ஏப்ரலில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களும் அடுத்தாண்டு ஏப்ரல் மாத ரிலீஸில் போட்டிப் போடலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால், சூர்யாவின் கங்குவா நிலை மோசமாகியுள்ளது. பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா ரிலீஸ் தேதி கிடைக்காமல் தற்போது திணறி வருகிறது.

ஆனாலும், விரைவில் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யும் என சொல்லப்படுகிறது. கங்குவா படத்தின் படப்பிடிப்பு கோவா, இலங்கை, கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. பேண்டசியான ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகி வருவதால், கடற்கரை ஏரியாவிலும் ஹில்ஸ் பகுதிகளில் மட்டும் இந்தப் படத்தின் காட்சிகளை ஷூட் செய்து வருகிறாராம் சிறுத்தை சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X