Kanguva: “வாளை விட கூர்மையானது இவன் கண்கள்”: மிரட்டும் சூர்யா! நள்ளிரவில் கங்குவா க்ளிம்ப்ஸ்...

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, நாளை தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்காக கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மேலும் அடுத்தடுத்து சூர்யாவின் மிரட்டலான போஸ்டர்களையும் வெளியிட்டு அதிரடி காட்டியது.

இந்நிலையில், கங்குவா க்ளிம்ப்ஸ் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளது.

 Kanguva: Suriyas Kanguva Glimpse released at 12.01 midnight

சூர்யாவின் 42வது படமாக உருவாகியுள்ள கங்குவா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்க, முக்கியமான கேரக்டரில் யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்தாண்டு கோவாவில் தொடங்கிய கங்குவா படப்பிடிப்பு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானரில் செம்ம ஃபேண்டசியாக இப்படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. அதிகமான போர் காட்சிகள், த்ரில்லிங்கான ஃபைட் சீன்ஸ் என படு மிரட்டலாக இருக்குமாம் கங்குவா. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதன்படி நாளை (ஜூலை 23) கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகவுள்ளது. இரு தினங்களுக்கு முன்பே இதுகுறித்து அறிவிப்பு வெளியானது. ஆனாலும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் நேரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. அதனை தற்போது மிரட்டலான போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நள்ளிரவு 12.01 மணிக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகிறது. கடந்த இரண்டு நாட்களாக சூர்யாவின் லுக் முழுவதும் வெளியாகவில்லை. முதல் போஸ்டரில் அவரது கை மட்டுமே இடம்பெற்றது, இரண்டாவது போஸ்டரில் சூர்யா குதிரையில் அமர்ந்திருப்பதாக உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது சூர்யாவின் கண்களை மட்டும் கார்னர் செய்துள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் வெறித்தனமான மிரட்டல் கண்களுடன் வெளியான இந்த போஸ்டர், அவரது லுக் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது. அதேபோல், இந்த போஸ்டரில், "வாளை விடவும் இவனது கண்கள் கூர்மையானது" என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவு வெளியாகும் கங்குவா க்ளிம்ப்ஸில் நிச்சயம் பல தரமான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சூர்யாவின் கேரியரில் கங்குவா செம்ம மாஸ் மூவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், கங்குவா க்ளிம்ப்ஸ் என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X