Kanguva: வேற லெவலில் மிரட்டும் கங்குவா க்ளிம்ப்ஸ்... சூர்யா ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்த அப்டேட்
சென்னை: சூர்யாவின் 42வது படமாக உருவாகியுள்ள கங்குவா தற்போது போஸ்ட் புரொடக்ஷனின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்காக சூர்யா டப்பிங் கொடுத்து வருகிறார். இதனிடையே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக கங்குவா படத்தில் இருந்து புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
விரைவில் கங்குவா புதிய க்ளிம்ப்ஸ்
சூர்யாவின் கேரியரில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சூர்யா நடித்துள்ள முதல் பீரியட் ஜானர் திரைப்படம் கங்குவா என்பதும் குறிப்பிடத்தக்கத்து. வரலாற்றுப் பின்னணியில் ஃபேன்டஸியாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சூர்யா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்திற்காக டப்பிங் கொடுக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார் சூர்யா.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்தாண்டு கங்குவா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் விஷுவல், மேக்கிங், சூர்யாவின் நடிப்பு, பிஜிஎம் ஆகியவை ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக இருந்தது. அதன் பின்னர் கங்குவா படத்தில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
அதேநேரம் படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு முன்னர் ரிலீஸ் செய்ய படக்குழு செய்திருந்தது. ஆனால், தற்போது கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மும்பையில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூர்யாவும் சிவகுமாரும் கலந்துகொண்டு ஞானவேல்ராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தற்போது பாலிவுட்டிலும் படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மும்பையிலும் ஆபிஸ் திறந்துள்ளார் ஞானவேல்ராஜா. அப்போது கங்குவா படத்தின் சில க்ளிம்ப்ஸ் காட்சிகளை சூர்யாவுக்கும் சிவகுமாருக்கும் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சூர்யா, பாபி தியோல் இருவரது ஆக்டிங்கும் பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் உள்ளதாம். முக்கியமாக சூர்யாவின் சேஞ்ச் கங்குவா படத்தில் தரமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல் பாபி தியோலின் லுக், நடிப்பு இரண்டுமே படத்திற்கு பெரிய ப்ளஸ் என விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில், மும்பையில் புதிய ஆஃபிஸ் திறந்துள்ளதால், அதனை கொண்டாடும் விதமாக கங்குவா புதிய க்ளிம்ப்ஸை வெளியிட ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளாராம். இது வெளியானதும் கங்குவா படம் மீதான எதிர்பார்ப்பு எகிற வைக்கும் என கோலிவுட்டில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











