Kanguva: GOAT ஸ்டைலில் கங்குவா அப்டேட்... விஜய் ரூட்டில் சூர்யா கொடுக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட்!

சென்னை: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. சிவா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக கங்குவா படத்தில் அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

GOAT ஸ்டைலில் கங்குவா அப்டேட்
சூர்யாவின் 42வது படமாக உருவாகி வருகிறது கங்குவா. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட கங்குவா ஷூட்டிங், இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, நட்டி, பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 Kanguva: Suriyas Kanguva Poster Expected to Release on Pongal Day

இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பாபி தியோல், சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இவர் கங்குவா படத்தில் சூர்யாவுடனும் மோதவிருப்பது அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. ஆக்‌ஷன் ஜானரில் பீரியட் மூவியாக உருவாகும் கங்குவா, 3டி தொழில் நுட்பத்தில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. டெக்னிக்கலாக கங்குவா படத்தை தரமாக உருவாக்கி வருகிறார் சிவா.

இதனால் சூர்யாவின் கேரியரில் இப்படியொரு படம் இதுவரை வெளியானது இல்லை என்ற பெருமை கங்குவாவுக்கு கிடைக்கும். ஏற்கனவே சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் மினி டீசரை படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யாவின் லுக் படு மிரட்டலாக இருந்தது. இதனையடுத்து சூர்யாவின் போஸ்டர்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார்.

அதில் ஒன்று பீரியட் ஜானர் லுக்கிலும், இன்னொன்று தற்போதைய அதாவது மார்டன் லுக்கிலும் இருப்பாராம். படத்தின் பெரும்பகுதி பீரியட் ஜானரிலும், 20% கதை மட்டும் இப்போது நடப்பதாகவும் இருக்குமாம். இதனால் சூர்யாவின் இரண்டு கெட்டப்-களும் வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கேரக்டர்களுக்கான சூர்யாவின் போஸ்டர்களை வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இருந்து விஜய்யின் இரண்டு போஸ்டர்களை புத்தாண்டு ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டது. அதேபோல் சூர்யாவின் போஸ்டர்களும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேநேரம் கங்குவா முடிந்ததும் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. அதற்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X