Kanguva: "நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்..” அனல் தெறிக்கும் கங்குவா போஸ்டர்... சூர்யா வைப் லோடிங்
சென்னை: சூர்யாவின் 42வது படமான கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
பீரியட் ஜானரில் பேண்டசியாக உருவாகும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் செம்ம மாஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனல் தெறிக்கும் கங்குவா போஸ்டர்: சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதேபோல், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன்பின்னர் சூர்யா தனது 42வது படத்தில் கமிட்டானார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கங்குவா என டைட்டில் வைக்கப்பட்டது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் கங்குவா படத்தை ஸ்டூடியோ க்ரீன்ஸ் தயாரித்து வருகிறது. தமிழ் உட்பட 10 மொழிகள், 3டி டெக்னாலஜி என படு மிரட்டலாக பீரியட் ஜானரில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகிறது கங்குவா. அதனை கன்ஃபார்ம் செய்யும் வகையில் சூர்யா பிறந்தநாளில் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.
அப்போது முதலே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. சூர்யாவின் கேரியரில் இப்படியொரு பிரம்மாண்டமான மூவி உருவானது இல்லை என்றே சொல்லப்படுகிறது. சூர்யாவும் கங்குவா படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனால், அவரும் கங்குவா படத்தை பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார். இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக கங்குவா படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இருள் சூழ நெருப்பின் ஒளியில் சூர்யா தனது கையில் தீப்பந்தத்துடன் மிரட்டலாக லுக் விடுகிறார். இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
இதுவரை சூர்யாவுக்கு இப்படியொரு போஸ்டர் வெளியானது இல்லை என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஹாலிவுட் மூவி ஸ்டைலில் செம்ம கிரியேட்டிவிட்டியாக வெளியான கங்குவா போஸ்டர், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











