Kanguva: “இவனுக்கு நிகராக யாரும் கிடையாது”... அதிரி புதிரியாக மிரட்டும் கங்குவா பட சூர்யா லுக்!

சென்னை: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷாக வெளியாகிறது.

இதுகுறித்து நேற்றே அப்டேட் வெளியிட்ட படக்குழு தற்போது இன்னொரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது.

 Kanguva: Suriyas second poster from Kanguva released now

மிரட்டலாக வெளியான சூர்யா போஸ்டர்: சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சூர்யாவின் கேரியரிலேயே இதுவரை இப்படியொரு பிரம்மாண்டமான படம் உருவானதே கிடையாது என சொல்லப்படுகிறது. அதேபோல், கோலிவுட்டுக்கும் கங்குவா திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 10 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்துக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

மேலும், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதனுடன் சூர்யாவின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யாவின் வலது கையில் பழங்கால டாட்டூஸ்கள் இருக்க, வாளுடன் மாஸ் காட்டுகிறார்.

இந்த போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் சூர்யா குதிரையின் மீது அமர்ந்திருக்க, அதன் பின்னணி போர்க்களமாக காட்சியளிக்கிறது. சூர்யாவின் முகம் தெரியவில்லை என்றாலும், அவர் ஒரு ராஜாவாகவோ அல்லது போர் வீரனாகவோ இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த போஸ்டருக்கு "இந்த வீரனுக்கு நிகராக யாரும் கிடையாது... இந்த அரசனைப் போல் இன்னொருவன் இல்லை" என கேப்ஷன் கொடுத்துள்ளது படக்குழு.

மேலும், நேற்றைய போஸ்டரில் இடம்பெற்ற "The Man... The Wild... The Story.." என்ற வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது. தி கிங் அரைவ்ஸ் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள சூர்யாவின் கங்குவா போஸ்டர்ஸ், படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. இந்நிலையில், வரும் 23ம் தேதி வெளியாகும் கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X