Kanguva: கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ கேம் மாதிரி இருக்கு... சூர்யா ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்த பிரபலம்!
சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியிருந்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா க்ளிம்ப்ஸை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்து வலைப் பேச்சு பிஸ்மி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ கேம் போல இருப்பதாகக் கூறியுள்ள அவர், அதற்கான வியூஸ் குறித்தும் விமர்சித்துள்ளார்.

கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ கேம் மாதிரி இருக்கு:சூர்யாவின் 42வது படமான கங்குவா பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வரும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. அதேபோல், கங்குவா படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமிருக்கும் என சொல்லப்படுகிறது.
அதனை நிரூபிக்கும் விதமாக கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த வாரம் 23ம் தேதி க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு, லுக், கிராபிக்ஸ், பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் முதல் பீரியட் ஜானர் படம் என்பதால் கங்குவா ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தப் படம் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கங்குவா க்ளிம்ப்ஸ் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வலைப் பேச்சு பிஸ்மி விமர்சித்துள்ளது சூர்யா ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது. அதாவது "வைக்கிங் பட கேரக்டர்களை பின்னணியாக வைத்து கங்குவா உருவாகியுள்ளதாகவும், தற்போது வெளியான க்ளிம்ப்ஸ், வீடியோ கேம் மாதிரி இருப்பதாகவும்" கூறியுள்ளார்.

அதேபோல், கங்குவா க்ளிம்ப்ஸுக்கு கிடைத்த வியூஸ் என்பது உண்மையில்லை என்றும், அது படக்குழுவினரின் ஏமாற்று வேலை என்பதைப் போன்றும் விமர்சித்துள்ளார். இதனைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் பிஸ்மிக்கு பதிலடி கொடுத்து வருவதுடன், இதெல்லாம் ஒரு பொழப்பா எனவும் கேட்டு வருகின்றனர். மேலும் விஜய்க்கு சப்போர்ட் செய்வதற்காக சூர்யாவை ஏன் வம்பிழுக்க வேண்டும் எனவும் பிஸ்மிக்கு பதில் கொடுத்துள்ளனர்.
கடந்தாண்டு கோவாவில் தொடங்கிய கங்குவா படப்பிடிப்பு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். சூர்யாவின் கேரியரில் கங்குவா படத்தின் பட்ஜெட் தான் அதிகம் என சொல்லப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கங்குவா படத்தின் வசூலை சூர்யா உட்பட படக்குழுவினர் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











