கங்குவா கலெக்ஷனுக்கு வேட்டு வைத்த வேட்டையன்?.. ரஜினிகாந்தின் குறியில் இருந்து தப்புவாரா சூர்யா?
சென்னை: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் சூர்யா ரசிகர்கள் ரஜினிகாந்தை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பாகுபலி, கேஜிஎஃப், காந்தாரா, புஷ்பா படங்களை எல்லாம் பாராட்டி பேசிய ரஜினிகாந்த் தமிழில் அப்படியொரு படமாக கங்குவா வரும் நிலையில், அந்த படத்துடன் கிளாஷ் விடலாமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1000 கோடி வசூல் சாதனையை கங்குவா படம் நிகழ்த்தும் என தனஞ்செயன், ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், வேட்டையன் படத்துடன் வெளியானால், அதுல பாதி எனக்கு கொடுத்துடு என வேட்டையன் வேட்டையாடி விடுவாரே என தற்போது சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருகின்றன.
கமல் படத்துடன் கிளாஷ் இல்லை: கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வருகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் கமல்ஹாசன் தயாரித்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன் படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கமல்ஹாசன் படத்துடன் ரஜினிகாந்த் படம் மோதாது என்பது உறுதியாகி விட்டது.
கங்குவா கலெக்ஷனுக்கு வேட்டு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் மற்றும் சூர்யாவின் கங்குவா என 2 படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானால், ரசிகர்களின் முதல் சாய்ஸ் ரஜினிகாந்தின் வேட்டையன் படமாகத்தான் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலுமே வேட்டையன் படத்தை தான் ரசிகர்கள் காண விரும்புவார்கள் என்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை பாதியாக கங்குவா படத்துக்கு குறைந்தாலே கலெக்ஷன் குறையும் என்றும் கூறப்படுகிறது. 1000 கோடி வசூல் வரவும் வாய்ப்பில்லை என்கின்றனர்.
ரிலீஸ் தேதி மாறுமா?: ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கங்குவா அதே தேதியில் வருமா அல்லது ஒரு வார காலம் தள்ளி வெளியாகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால், நிச்சயம் வசூலில் இரண்டு படங்களுக்கு சிக்கல் உருவாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











