அட்ஜஸ்ட் செய்தால் தான் வாய்ப்புன்னு அம்மாவிடமே சொன்னாங்க: நடிகை வேதனை
Recommended Video

திருவனந்தபுரம்: சினிமா துறையில் அட்ஜஸ்ட் பண்ணுவது குறித்து பேசியுள்ளார் நடிகை கனி குஸ்ருதி.
கேரளாவை சேர்ந்தவர் நடிகையும், மாடலுமான கனி குஸ்ருதி. அவர் மா தமிழ் குறும்படத்தில் பேபி அனிகாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் பிசாசு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவர் சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

நடிப்பு
நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் படங்களில் நடிக்கத் துவங்கிய பிறகே ஒரு விஷயம் புரிந்தது. இந்த துறையில் இருந்தால் நான் நானாக இருக்க முடியாது என்பது புரிந்தது.

பெற்றோர்
எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு கலைஞரை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. இதனால் இங்கு தாக்குப்பிடிக்க கஷ்டப்பட்டேன். என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் எனக்காக பேச வேறு யாரும் இல்லை.

கதை
இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் உங்கள் மகள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள். அந்த காரணத்தால் கதை பிடித்தும் நடிக்காமல் இருந்துள்ளேன். இந்த துறையில் நிறைய அசவுகரியங்களை சந்தித்துவிட்டேன். என்னை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

பணம்
அட்ஜஸ்ட் பண்ணி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மேடை நாடகங்களில் நடிக்க சென்றேன். மேடை நாடகங்களில் எனக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. மீண்டும் படங்களில் நடிக்க வந்தபோது அட்ஜஸ்ட் பண்ணாமல் வாய்ப்புகளை பெறுவது கடினமாக இருந்தது என்கிறார் கனி.


Click it and Unblock the Notifications











