விஜய்சேதுபதியின் அந்த படத்தில் அப்படியொரு ரோலாம்.. ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை!
சென்னை: பைவ் ஸ்டார், எதிரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை கனிகா விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்தில் தான் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்ற ரகசியத்தை அண்மையில் கனிகா கசியவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்துள்ளார்.

விஜய்சேதுபதி உதவி
மாதவன், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கனிகா, கடைசியாக மம்மூட்டியின் மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அவருக்கு சரியாக படங்கள் அமையாமல் மார்க்கெட் இழந்து பல வருடங்கள் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்காமல் இருந்த கனிகாவுக்கு விஜய்சேதுபதி தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இயக்குநர்
நடிப்பது மட்டுமின்றி, டப்பிங் பேசுவது, பாடுவது என பல திறமைகளை கொண்ட நடிகை கனிகா, சமீபத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் இயக்கிய ‘மா' குறும்படம் ரசிகர்களாலும், பிரபலங்களாலும் பாராட்டப்பெற்றது. மேலும், பல குறும்படங்களை இயக்கவும் கனிகா முயற்சித்து வருகிறார்.

என்ன ரோல்
வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கி வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இலங்கை அகதியாக நடிகை கனிகா நடித்து வருகிறாராம். இலங்கை தமிழ் பேசி தனது போர்ஷன் முழுவதையும் லாக்டவுனுக்கு முன்னதாகவே நடிகை கனிகா நடித்துக் கொடுத்துவிட்டதாக சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டப்பிங்
விஜய்சேதுபதி, மோகன் ராஜா, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், லாக்டவுன் தளர்வுகள் காரணமாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. தன்னுடைய போர்ஷன்கள் முற்றிலும் முடிந்த நிலையில், டப்பிங்கையும் பேசி முடிக்கப் போவதாக கனிகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











