ஐசியூவில் எனது மகன்..7 மணி நேர ஆபரேஷன்..மகனை நினைத்து உருகிய கனிகா!
சென்னை : நடிகை கனிகா தனது மகனின் இதயநோய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2001ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னராக வந்த கனிகா, பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து கனிகா, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை கனிகா
நடிகை கனிகா சினிமா துறையில் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், ஜெனிலியா, ஷ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகை கனிகா தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தில், அவரின் நடிப்பு மிகவும் பாராட்டுகளை பெற்றது.

ஓ காதல் கண்மணி படத்தில்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கனிகா பல மலையாள சினிமாக்களில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இதையடுத்து ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு படங்களிலிருந்து விலகியிருந்தார். இந்த தம்பதிக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சோகமான பதிவு
தற்போது கனிகா விஜய் சேதுபதியின் யாதும் ஊரே... யாவரும் கேளிர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் கனிகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் குறித்து சோகமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனது மகன் பிறந்தவுடன் என்னிடம் காட்டவில்லை. பிறந்தவுடனே அவனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதனால் ஐசிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகனை பார்த்தவுடன், எனது மனம் இரண்டாய் உடைந்தது.

7 மணி நேரம் ஆப்ரேஷன்
பின்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஆபரேஷன் செய்தனர். 7 மணி நேரம் ஆப்ரேஷன் நடந்தது, என் மகனை பிழைக்க வைத்துவிட்டார்கள் அது மிகவும் கடுமையான தருணம். அதன் பிறகே பிறகு என் மகன் நலமுடன் இருக்கிறான் என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கனிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











