ஈக்கள் மொய்த்த 2 வாழைப்பழத்தையும், ஒரு ஆரஞ்சு பழமும் மட்டுமே கொடுத்தனர்.. பாடகி கனிகா கபூர் அதகளம்!

லக்னோ: மருத்துவமனையில் தனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும் ஒரு ஆரஞ்சு பழத்தையும் மட்டுமே கொடுத்தனர் என புகார் கூறியிருக்கிறார் பாடகி கனிகா கபூர்.

Recommended Video

Singer Kanika Kapoor tested Positive

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர் கடந்த மாதம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க லண்டன் சென்றார். லண்டனில் கடந்த 9ஆம் தேதி மும்பை வந்தார் கனிகா.

விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் சோததனைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் கனிகா. அதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி விமானம் மூலம் தனது சொந்த ஊரான லக்னோவுக்கு சென்றுள்ளார்.

கொரோனா

கொரோனா

இதனை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் எம்பிக்கள் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களுடனும் நெருக்கமாக பழகியிருக்கிறார் பாடகி கனிகா கபூர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

லக்னோ மருத்துவமனை

லக்னோ மருத்துவமனை

இதனை தொடர்ந்து உடனடியாக லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கனிகா கபூர். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் வரை

குடியரசுத் தலைவர் வரை

ஆனால் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு கனிகா கபூர் ஊர்சுற்றியதோடு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கனிகா சந்தித்த நபர்கள், குடியரசுத் தலைவரையும் சந்தித்ததால் குடியரசுத் தலைவர் வரை கொரோனா பீதி தொடர்ந்தது. கனிகாவால் 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கனிகா குற்றச்சாட்டு

கனிகா குற்றச்சாட்டு

கனிகாவால் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசூந்தரா ராஜே, மற்றும் அவரது மகனும் எம்பியுமான துஷ்யந்த் ஆகியோர் தாங்களாகவே தனிமை படுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனக்கு போதுமான வசதிகள் வழங்கப்படவில்லை என பாடகி கனிகா குற்றம் சாட்டியுள்ளார்.

ஈ மொய்த்த வாழைப்பழம்

ஈ மொய்த்த வாழைப்பழம்

மருத்துவமனையில் தனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும், ஒரு ஆரஞ்சு பழமும் மட்டுமே கொடுத்தனர். சில உணவுக்கள் எனக்கு அலர்ஜி தரக்கூடியவை. அதனால் அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. பசியாக இருந்த எனக்கு மருந்தும் கொடுக்கப்படவில்லை; அதுமட்டுமின்றி எனக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. இந்த சூழலில் இங்கு இருப்பது கொடூரமானது என கூறியிருக்கிறார்.

நோயாளி போல் இல்லை

நோயாளி போல் இல்லை

ஆனால் கனிகா கபூரின் இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கனிகா கபூருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. மேலும் பாடகி கனிகா நோயாளி போல் நடந்துக்கொள்ள வில்லை என்றும் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X