கொரோனா பார்த்த வேலை.. பிரியங்கா சோப்ராவை பின்னுக்குத்தள்ளி..முதலிடம் பிடித்த பாடகி கனிகா கபூர்!
சென்னை: கொரோனாவால் பரபரப்பாகப் பேசப்பட்ட கனிகா கபூர், இப்போது மற்றொரு விஷயத்துக்காக பரபரப்பாகப் பேசப்படுகிறார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு
மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கனிகா கபூர்
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்து லக்னோ வந்த கனிகா, 3 விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதில், ஒரு நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. துஷ்யந்த் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச மாநில சுகாதார துறை அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனா்.

கொரோனா வைரஸ்
இதன் பிறகு, கனிகாவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து, பரிசோதிக்கப்பட்டார். அதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துஷ்யந்தும், வசுந்தராவும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தனா்.

தனிமைப்படுத்தினர்
கடந்த 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் துஷ்யந்த் சிங் பங்கேற்றிருந்தார். அத்துடன், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலும் அவா் கலந்துகொண்டார். அதில் சுமார் 20 எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனா். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல்வேறு எம்.பி.க்களும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

வழக்குப் பதிவு
இதையடுத்து அலட்சியத்துடன் செயல்பட்டதாக கனிகா கபூா் மீது லக்னோ, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது பிகாரில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அவருக்கு 6-வது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார் கனிகா கபூர்.

முதலிடத்தில் கனிகா
இந்நிலையில் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறார் கனிகா கபூர். அதாவது லாக்டவுன் நேரத்தில் யாஹூவில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக கனிகா பூர் இருந்துள்ளார். லாக்டவுனுக்கு முன்பு அதிகம் தேடப்பட்ட நபராக பிரியங்கா சோப்ரா இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் கேத்ரினா கைஃப், தீபிகா படுகோன் இருந்தனர். லாக்டவுனில் அவர்களைப் பின்னுக்குத்தள்ளி, முதலிடம் பிடித்திருக்கிறார் கனிகா கபூர்.


Click it and Unblock the Notifications











