twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவும்.. குழப்பங்களும்.. என்னதான் நடந்தது.. எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்த கனிகா கபூர்!

    |

    லக்னோ: பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பரவியதில் இருந்து பலவிதமான கதைகள் அவரை சுற்றி உலா வந்தன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    Recommended Video

    ரொமான்டிக் மூடில் ஹீரோயின் வெளியிட்ட வீடியோ!

    லண்டனில் இருந்து திரும்பி வந்த பாடகி கனிகா கபூர், மும்பையில் கொரோனா டெஸ்ட் செய்யாமல் ஏமாற்றியதாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 160 பேருக்கு கொரோனா பரப்பியதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவின.

    மேலும், மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என வந்த பிறகு, மருத்துவர்களுக்கு தொல்லை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    நான் அழகானவளா இருக்க விரும்பலை.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் மெசேஜ்.. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்! நான் அழகானவளா இருக்க விரும்பலை.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் மெசேஜ்.. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

    கட்டுக்கதை

    கட்டுக்கதை

    கொரோனா நெகட்டிவ் என வந்த பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த கனிகா கபூர், இத்தனை நாட்கள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறித்து வெளியான கதைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்றும், உண்மையை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் கூறியிருக்கிறார்.

    கொரோனா பரவவில்லை

    கொரோனா பரவவில்லை

    இங்கிலாந்து, மும்பை மற்றும் லக்னோவில் தன்னுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா பரவவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், மார்ச் 10ம் தேதியே தான் மும்பைக்கு வந்ததாகும், மார்ச் 18ம் தேதி தான் இங்கிலாந்து அரசு டிராவல் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

    நடத்தவில்லை

    நடத்தவில்லை

    மார்ச் 10ம் தேதி மும்பை வந்த கனிகா கபூர், தனது சொந்த ஊரான லக்னோவிற்கு மார்ச் 11ம் தேதி சென்று தனது பெற்றோர்களை சந்தித்தார். ஆனால், உள்நாட்டு விமான நிலையங்களில் கொரோனா சோதனை ஏதும் அப்போது நடத்தவில்லை என்றும், அந்த மூன்று நாட்களில் எந்தவொரு நிகழ்ச்சியையும் தான் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

    மூன்று முறை

    மூன்று முறை

    கடந்த மார்ச் 19ம் தேதி தனக்கு நடத்தப்பட்டது. கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவு மார்ச் 20ம் தேதி வந்தது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கு தனக்கு மூன்று முறை நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகே தன்னை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர் என்று கூறியுள்ளார்.

    பல்வேறு வழக்குகள்

    பல்வேறு வழக்குகள்

    மருத்துவமனையில் தன்னை கனிவுடன் பார்த்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தனது நீண்ட விளக்க உரையில் நன்றியை தெரிவித்துள்ளார் கனிகா கபூர். கொரோனா பாதிப்பை மறைத்து அலட்சியத்துடன் கனிகா கபூர் செயல்பட்டதாக லக்னோ போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பீகார் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து கனிகா கபூர் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    English summary
    'Baby Doll' singer Kanika Kapoor has taken to Instagram to slam all those reports with her latest post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X