பெற்றோர்கள் சந்தேகம்.. மீண்டும் உறுதியான கொரோனா.. கனிகா கபூரின் அட்டகாசம் இனியாவது அடங்குமா?
லக்னோ: கனிகா கபூருக்கு வழங்கப்பட்ட கொரோனா பாதிப்பு ரிப்போர்ட் குறித்து அவரது பெற்றோர்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில், இரண்டாவது சோதனையிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அலறிக் கொண்டு இருக்கிற நிலையில், கூலாக, மருத்துவர்களையும் மருத்துவமனையையும் குறை சொல்லி வருகிறார் கனிகா கபூர்.
லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பாடகி கனிகா கபூர், விமான நிலையத்திலேயே கொரோனா வைரஸ் சோதனைக்கு டிமிக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் சந்தேகம்
லண்டனில் இருந்து மும்பை வந்த பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கனிகா கபூரின் ரிப்போர்ட்டில் அவரது பாலினம் மற்றும் வயது பிழையாக இருந்ததால், அவரது ரிப்போர்ட் மீது பெற்றோர்கள் சந்தேகத்தை கிளப்பினர்.

கொரோனா கன்ஃபார்ம்
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில், திங்களன்று, இரண்டாவது முறையாக பாடகி கனிகா கபூருக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையிலும், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கனிகாவுக்கு கொரோனா மீண்டும் உறுதியாகி உள்ள நிலையில், மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொந்தரவு
வாழைப் பழத்தில் ஈ மொய்த்துக் கிடக்கிறது, சுகாதாரமான முறையில் தனக்கு உணவுகள் வழங்கப்படுவதில்லை என ஒரு நோயாளியை போல நடந்து கொள்ளாமல், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு தினமும் தொல்லைக் கொடுத்து வருகிறார் என்று கனிகாவின் மீது புகார்கள் எழுந்துள்ளன. பிரபலம் போல நடந்து கொள்ளாமல், நோயாளியை போல அமைதியா ஒத்துழைப்பு கொடுங்க என மருத்துவர்கள் கண்டித்துள்ளனர்.

பயம்
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய கனிகா கபூர், லக்னோவில் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சுமார் 160 பேருக்கு கனிகா கபூரால், கொரோனா பரவியிருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. கனிகா கபூருடன் நெருங்கி பழகியவர்கள், குடியரசுத் தலைவர் வரை சந்தித்ததால், பலரும் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

வழக்குப் பதிவு
கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளாமல், பல்வேறு பார்ட்டிகளுக்கு சென்று பலருக்கும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்தார் என கனிகா கபூர் மீது, இபிகோ செக்ஷன் 188, 269 மற்றும் 270 பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











