லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர்.. இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா? வைரலாகும் போட்டோ!
லக்னோ: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கனிகா கபூர் தான் அவருக்கு கொரோனா பரப்பினார் என்ற வதந்தி தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடியோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என உலகம் முழுவதும் பலரையும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது.

கனிகாவுக்கு கொரோனா
லண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து, பல பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பாடகி கனிகா கபூர், சுற்றித் திரிந்து, பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அட்டகாசம்
கொரோனா நோய் தாக்கிய நோயாளியைப் போல கனிகா கபூர் இல்லாமல், தான் ஒரு பிரபல பாடகி என்பதை மருத்துவமனையிலும் பில்டப் செய்து, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். உயிரைக் கொடுத்து மருத்துவர்களும், செவிலியர்களும், அவரது உயிரைக் காப்பாற்ற போராடி வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை உள்ளிட்ட புகார்களை எழுப்பி அட்டகாசம் செய்து வருகிறார்.

இங்கிலாந்து இளவரசர்
இந்நிலையில், நேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், நேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பழைய போட்டோ
ஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்றும், இவை 2015ம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது வீண் வதந்தி என்றும் கனிகாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

சந்தித்தாரா?
இந்த முறை இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்த கனிகா கபூர், இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சந்தித்தாரா? இல்லையா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனடா பிரதமரின் மனைவி மற்றும் ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











