படம் எடுத்து போண்டியான பிரபல காமெடி நடிகர்.. பல கோடி கடன்.. சொந்த வீடு..சொத்துக்களை விற்கும் அவலம்!
சென்னை: பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு கடன் பிரச்சனையால் தனது வீடு மற்றும் சொத்துக்களை விற்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இயக்குநர் பாலாவின் பிதாமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கஞ்சா கருப்பு.
தொடர்ந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, பம்பர கண்ணாலே, சண்டக்கோழி என பல படங்கிள்ல நடித்துள்ளார்.

சங்கீதாவுடன் திருமணம்
முன்னணி நடிகர்கள் பலரின் படங்கள் என இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட கஞ்சா கருப்பு கடந்த 2010ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான பரணியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தார்.

வேல்முருகன் போர்வெல்ஸ்
இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் கஞ்சா கருப்பு. இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னதாக 2014ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார் கஞ்சா கருப்பு.

கடன் தொல்லை
இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. இதனால் பல கோடி கடனுக்கு ஆளானார் கஞ்சா கருப்பு. இந்நிலையில் கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சொந்த வீடு மற்றும் சொத்துபத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வாய்ப்பே இல்லை
படம் தயாரித்து மொத்த சொத்தையும் இழந்துள்ள கஞ்சா கருப்பு, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கஞ்சா கருப்பு இனி தான் படம் தயாரிக்க வாய்ப்பே இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











