அதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!
நடிகர் கஞ்சா கருப்பு இன்று அதிமுகவில் இணைந்து கொண்டார்.
சென்னை: பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு ராஜா, பிதாமகன் படத்தில் நடித்த பிறகு கஞ்சா கருப்பு ஆனார். அதன் பின்னர் நிறைய படங்களில் காமெடி நடிகராக நடித்து, பிரபலமானார்.

இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார்.
இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











