கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகைக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் திடீர் அனுமதி..பதறிய ரசிகர்கள்!

சென்னை : கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் பிறந்து வளர்ந்த விசாகா சிங், மாடல் துறையில் இருந்த ஆர்வத்தால் மாடலாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து, விசாகாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, ஞானப்பாக்கம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த படம் வந்த சூட்டோடு பெட்டிக்குள் முடங்கிப்போனதால் பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

kanna laddu thinna aasaiya Heroine vishakha singh admitted in hospital

நடிகை மற்றும் தயாரிப்பாளர் : நடிகை விசாகா சிங்கின் தந்தை சிதேந்திர சிங் மிகப்பெரிய தொழில்அதிபர் என்பதால், நடிக்கும் ஆசைமட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பாளராகவும் மாறி பெட்லர்சு என்ற வாசன், அராம்கோர் போன்ற படங்களை தயாரித்தார். ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், என பல்வேறு மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா : பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் தமிழில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் விசாகா சிங்கை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் பயம் ஒரு பயணம் என்ற படத்தில் நடித்தார். இதன் பின் படவாய்ப்பு இல்லாததால், NFT தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

kanna laddu thinna aasaiya Heroine vishakha singh admitted in hospital

மருத்துவமனையில் : இந்நிலையில் நடிகை விசாகா சிங். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே என்னால் இருக்க முடியாது. இலையுதிர் காலம், குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் அடிக்கடி வரும். அசம்பாவிதங்கள், விபத்துக்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பிறகு மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கிக் காத்திருக்கிறேன்.

kanna laddu thinna aasaiya Heroine vishakha singh admitted in hospital

Recommended Video

Super Deluxe Actor Noble K. James Interview “நான் தளபதி வெறியன்”

பதறிய ரசிகர்கள் : ஏப்ரல் எப்போதும் எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்தது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதால், அல்லது இது எனது பிறந்த மாதத்தின் முந்தைய மாதம் என்பதால் இருக்கலாம். கோடை நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடன் ஆரோக்கியமாக முன்னேறி வருகிறேன் என பதிவிட்டு இருந்தார். ஆனால், என்ன ஆனது என்ன காரணத்திற்காக மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை பதிவிடவில்லை. இதனால், இவரின் ரசிகர்கள் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X