Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கொரோனா பாதிப்பு. சிகிச்சை பெற்று வந்த பிரபல இளம் நடிகர் மரணம்..திரைத்துறையினர் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல இளம் நடிகர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் டிஎஸ் மஞ்சுநாத். இவர் சம்யுக்தா 2 மற்றும் கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா ஆகிய படங்களை தயாரித்து நடித்துள்ளார்.
ஆர்யாவுக்கே
டஃப்
கொடுக்கும்
சாயிஷா…
வெறித்தனமான
ஒர்க்
அவுட்
வீடியோ
!
கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா படத்தில் சந்தன் அச்சார் மற்றும் சஞ்சனா ஆனந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர். இந்தப் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார் மஞ்சுநாத்.

ரசிகர்கள் அதிர்ச்சி
35 வயதான மஞ்சுநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மஞ்சுநாத் மரணமடைந்தார். அவரது மரணம் கன்னட சினிமாத் துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய கதாப்பாத்திரம்
ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் மஞ்சுநாத். இந்தப் படத்தை அபிராம் இயக்கி வருகிறார். தப்லா நானி, ஓம் பிரகாஷ் ராவ், எஸ் நாராயண் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிறந்தநாளில் ரிலீஸ்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இம்மாதம் 22ஆம் மஞ்சுநாத்தின் பிறந்தநாளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான மஞ்சுநாத் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.

இரண்டாவது அலை
மஞ்சுநாத்தின் மரணம் மொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு
பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.