»   »  காதலை ஏற்க மறுத்த நடிகை: பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகர்

காதலை ஏற்க மறுத்த நடிகை: பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான ஹூச்சா வெங்கட் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

கன்னட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஹூச்சா வெங்கட். அவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான ரியாலிட்டி ஷோவான சூப்பர் ஜோடி 2-ல் கலந்து கொண்டார்.

Kannada actor attempts suicide

அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜோடியாக இருந்த ரச்சனா என்ற துணை நடிகையை வெங்கட் காதலித்துள்ளார். தனது காதலை அந்த பெண் ஏற்க மறுக்கவே வெங்கட் நேற்று தனது பண்ணை வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ரச்சனா கூறும்போது, நான் வெங்கட்டை எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்றார்.

வெங்கட் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு ரச்சனாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

English summary
Kannada actor, producer, director Huchcha Venkat allegedly tried to commit suicide by drinking phenyl at his farm house on Sunday, June 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil