நடிகர் அர்ஜுனின் உறவினர்.. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
பெங்களூரு: நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
Recommended Video
39 வயதே ஆன கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை மேக்னா ராஜை கடந்த 2018ம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனான இவர், 2009ம் ஆண்டு ரிலீசான வாயுபுத்ரா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் ஹீரோவாக கால் பதித்தார்.
2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்துள்ளார். அதில் 14 படங்கள் ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இவர் நடிப்பில், ராஜமார்த்தாண்டா, ஏப்ரல், ரணம், க்ஷத்ரியா உள்ளிட்ட படங்கள் ஷூட்டிங் முடிந்தும், பாதி ஷூட்டிங்கிலும், ரிலீசுக்கும் காத்திருக்கின்றன.
மூச்சுத் திணறல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிரஞ்சீவி சர்ஜாவின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் அவரது ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள பெங்களூரு விரைந்துள்ளனர். அர்ஜுனின் தந்தை நடிகர் சக்தி பிரசாத்தின் பண்ணை வீட்டில் (துமாக்கூர் சாலை) இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.


Click it and Unblock the Notifications