அர்ஜுன் மருமகன்..பிரபல நடிகையின் கணவர்.. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்..திரையுலகம் அதிர்ச்சி
பெங்களூரு: நடிகர் அர்ஜுனின் மருமகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்துள்ளது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 39.
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினர். பின்னர் கன்னட சினிமாவில் நடிகரானார்.

பையா ரீமேக்
இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதையடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட 22 படங்களில் நடித்துள்ளார். இப்போது சில படங்களில் நடித்து வந்தார்.

மூச்சுத்திணறல்
லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பெங்களூரில் உள்ள ஜெயா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேக்னா ராஜ்
இந்நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி, மேக்னா ராஜ், பிரபல நடிகை ஆவார். இருவரும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகினர் அதிர்ச்சி
திரையுலகினர் அதிர்ச்சி சிரஞ்சீவி சார்ஜா மறைவால் கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பது மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கேள்விபட்டு நடிகர் அர்ஜுன், குடும்பத்துடன் பெங்களூர் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











