கார் பார்க் பண்ணது குத்தமாய்யா.. நாயை விட்டு கடிக்க விடலாமா?.. பிரபல நடிகர் மீது வழக்கு தொடுத்த பெண்

பெங்களூர்: பிரபல கன்னட நடிகரின் வளர்ப்பு நாய் பெண் ஒருவரை கடித்த நிலையில், நடிகர் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

Kannada actor Darshan face a case after his pet dogs bite woman near his residence

ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் வீட்டின் அருகே உள்ள காலி மனையில் தனது காரை பெண் ஒருவர் பார்க் செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிய போது சுமார் 3 நாய்கள் அவரை கடித்து காயம் ஏற்படுத்தியதாக அந்த புகாரில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்க நடிகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன்: சக்கரவர்த்தி, ராபர்ட், குருக்‌ஷேத்ரா சமீபத்தில் வெளியான கிரந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தர்ஷன். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் 46 வயதான நடிகர் தர்ஷனின் நாய்கள் தன்னை கடித்து காயம் ஏற்படுத்தியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் தர்ஷன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணை கடித்த நாய்: பெங்களூர் ஆர்ஆர் நகரில் உள்ள தர்ஷன் வீட்டு அருகே உள்ள காலி மனையில் தனது காரை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு திரும்பி வந்த போது அந்த இடத்தில் 3 நாய்கள் இருந்ததாகவும், அந்த நாய்களை பாதுகாத்துக் கொண்டிருந்தவர் பண்ண செய்கை காரணமாக தன்னை 2 நாய்கள் கடித்து இடுப்பில் காயம் ஏற்படுத்தி உள்ளதாக அமிதா ஜிண்டல் எனும் பெண் புகார் அளித்துள்ளார்.

வழக்குப் பதிவு: இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது வீட்டு பணியாளர் மீது 289வது பிரிவின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் தர்ஷன் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kannada actor Darshan face a case after his pet dogs bite woman near his residence

வாக்குவாதம்: தர்ஷன் வீட்டுக்கு எதிரே இருந்த காலி மனையில் தான் கார் நிறுத்தியதற்காக நாய்களை வைத்துக் கொண்டிருந்த பாதுகாவலர் தன்னுடன் வாக்குவாதம் செய்தார் என்றும் அதன் பின்னர் தான் அந்த நாய்கள் என்னை தாக்கத் தொடங்கியது என்றும் அந்த பெண்மணி புகார் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X