Darshan Arrested: ரேணுகா சாமி கொலை வழக்கு.. பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!!
பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த போது பெங்களுர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுடன் சேர்த்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் கன்னட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார். இவர், 2006ம் ஆண்டு தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த தயாரிப்ப நிறுவனத்தின் மூலம் உருவான ஜோதே ஜோதேயலி படத்தில் தர்ஷன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன் பின், அனதாரு,கிராந்திவீர, சங்கொல்லி ராயண்ணா என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்

நடிகர் தர்ஷன்: தர்ஷனுக்கு விஜய லட்சுமி என்ற மனைவி இருக்கும் நிலையில், அவர் பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகா சாமி மோசமாக கமெண்ட் செய்து வந்தார். மேலும், தர்ஷனின் மனைவி விஜய லட்சுமியும், பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்தார். மேலும், சஞ்சய் சிங் என்ற மற்றொரு நபருடன் பவித்ரா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவியது.
இந்த விவகாரம் பத்திரிக்கையில் பூதாகரமான நிலையில், ரேணுகா சாமி ஜூன் 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் 9ந் தேதி மீட்கப்பட்டது. முதலில் ரேணுகா சாமி தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் பரவியது. ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் அது கொடூரமான கொலை என்பது தெரியவந்தது.
கொடூர கொலை: இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தர்ஷன் சொல்லித் தான் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் தர்ஷன் வீட்டில் வைத்து ரேணுகா சாமியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து பின்னர் உடலை வேறு இடத்தில் வீசியிருக்கிறார்கள். தர்ஷன் கண் முன்பு தான் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த போது பெங்களுர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுடன் சேர்த்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











