திருநள்ளாறு கோவிலுக்கு குடும்பத்துடன் திடீர் விசிட் அடித்த கன்னட நடிகர்.. காரணம் என்ன தெரியுமா?

By Staff

திருநள்ளாறு: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் திருநள்ளாறு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

மகாபாரதா என்ற கன்னட படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், தர்ஷன். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், மகாராஜன் இயக்கிய வல்லரசு படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

இவர் நடித்த குருக்‌ஷேத்ரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உட்பட ஜந்து மொழிகளில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு

தர்ஷன் கன்னடத்தில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரது படங்கள் அங்கு வெளியானால் திருவிழா தான்.
கடந்த வருடம் பிரம்மாண்ட வெற்றி உடன் துவங்கினார் தர்ஷன். இவர் நடித்த எஜமானா திரைப்படம் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தமிழகத்தில் இந்த படம் மூலம் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினர்.

மகாபாரத படம்

மகாபாரத படம்

இவரது நடிப்பில் கடந்த வருடம் கன்னடம், தமிழ் உட்பட ஜந்து மொழிகளில் வெளியான திரைப்படம் குருக்‌ஷேத்ரா. 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக எடுக்கபட்டு இருந்தது. கன்னடத்தில் இப்படம் நல்ல வசூலை குவித்தது. இதில் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

வீரம் ரீமேக்

வீரம் ரீமேக்

தமிழில் தல அஜித் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வீரம் படத்தின் கன்னட ரீமேக்கில் தர்ஷன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஒடையா என்று தலைப்பு வைத்தனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

 ராபர்ட் பர்ஸ்ட் லுக்

ராபர்ட் பர்ஸ்ட் லுக்

இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ராபர்ட். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் மாதமும் செகண்டு லுக் கடந்த ஜனவரி மாதமும் வெளியானது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தர்ஷன் திருநள்ளாறு கோவிலுக்கு வந்துள்ளார்.

திடீர் விசிட்

திடீர் விசிட்

தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த கன்னட நடிகர் தர்ஷன், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சனீஸ்வர பகவானை சாமி தரிசனம் செய்து உள்ளார். தனது அடுத்த படமான ராபர்ட் படத்தின் வெற்றிக்காகவும் தோஷ நிவர்த்திக்காகவும், தர்ஷன் திருநள்ளாறு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X