கன்னட நடிகர் துருவா சர்ஜாவுக்கு கொரோனா.. மனைவிக்கும் பாசிட்டிவ் என டிவிட்டரில் அறிவிப்பு!

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் துருவா சர்ஜா மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுனின் மருமகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நீண்ட நாள் தோழியான பிரேரானாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் மறைந்த சோகம்

அண்ணன் மறைந்த சோகம்

கடந்த மாதம் 7ம் தேதி துருவா சர்ஜாவின் அண்ணனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நடிகை மேக்னா ராஜின் கணவரான சிரு மறைந்த செய்தியை கேட்டு, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் சோகத்தில் மூழ்கியது. அண்ணன் இறந்த சோகத்தில் இருந்து வந்த துருவாவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஹீரோ ஆகணும் மாமா

ஹீரோ ஆகணும் மாமா

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தனது மாமா நடிகர் அர்ஜுனிடம் தானும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார் துருவா. இவரது அண்ணன் சிருவை ஹீரோ ஆக்கியது போல இவரையும் அர்ஜுன் ஹீரோ ஆக்கினார். 2012ம் ஆண்டு வெளியான அதூரி படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமானார்.

தோழியுடன் திருமணம்

தோழியுடன் திருமணம்

சிறு வயது முதலே தனது தோழியாக இருந்த பிரேரானா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி திருமணம் செய்துக் கொண்டார் துருவா சர்ஜா. அதூரி, பகதூர், பார்ஜரி, பிரேமா பராஹா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்துள்ள பொகரு படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்நிலையில், தற்போது தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மருத்தவமனையில் தாங்கள் குவாரண்டைன் செய்யப்பட உள்ளதையும் நடிகர் துருவா சர்ஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். துருவாவுக்கு கொரோனா பரவியதை அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

லேசான அறிகுறிகள் தான்

லேசான அறிகுறிகள் தான்

இருவருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருக்கின்றன, நீங்களும், உங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள், போதுமான வரையில் பாதுகாப்புடன் இருங்கள், யாரும் பயப்பட வேண்டாம், விரைவில் இருவரும் குணமாகி வீடு திரும்புவோம் என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் துருவா.

ரசிகர்கள் பிராரத்தனை

ரசிகர்கள் பிராரத்தனை

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு கொரோனா பரவிய நிலையில், தற்போது கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான துருவாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அறிந்த அவரது ரசிகர்கள், ஆஞ்சநேயர் படங்களை போட்டு, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X