கன்னட நடிகர் திலீப் ராஜ் மரணம்.. யாருக்கும் இப்படி ஒரு சாவு வரக்கூடாது.. எப்படி இறந்தார் தெரியுமா?
கர்நாடகா: கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் மிகவும் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது, 47. இவரது இந்த மரணம் ரசிகர்கள், திரையுலகினர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரையும் பேரதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. மே 13ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், அவர் மொத்தமாக சீர்குலைந்து போனார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனலிக்காமல் இறந்தார். உடல் ஆரோக்யத்துடன் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த இவர், திடீரென மோசமான மாரடைப்பால் மறைந்தது மொத்த கன்னடத் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திலீப் ராஜ், கன்னட சினிமா மற்றும் சின்னத்திரையில் பன்முக நடிகராக வலம் வந்தவர். இவர் தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், கதாநாயகன், வில்லன், துணை வேடங்களில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காததால், சின்னத்திரையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனி முத்திரை பதித்தார்.
அப்படி இருக்கையில் நடிகர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் இயல்பாகவும் பழகக் கூடியவர் என பலரும் அவர் குறித்து வருகிறார்கள். அரசிகெரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1978 செப்டம்பர் 2 அன்று பெங்களூரில் பிறந்தார். நாடகங்களில் இருந்து சினிமா, சின்னத்திரைக்கு வந்தவர்; ஆரம்பம் முதல் நடிப்பின் மீது ஆர்வம் காட்டினார்.
சினிமா ஆர்வம்: திரைப்படத் துறையில் 2005-ல் வெளியான 'பாய் ஃபிரண்ட்' படம் மூலம் அறிமுகமானார். பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த 'மிலானா' படத்தில் வில்லனாக நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றார். 'யூ டர்ன்', 'ஆர்கெஸ்ட்ரா மைசூரு', '7 ஓ கிளாக்', 'க்ஷண க்ஷண' போன்ற குறிப்பிடத்தக்க படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
இரங்கல்: 47 வயதில், கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் மிகவும் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவரது மாரடைப்பு மிகவும் மோசமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications