twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோர விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய கார்.. நூலிழையில் உயிர் தப்பிய 7ஜி ரெயின்போ காலனி பட நடிகர்

    |

    பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் குருராஜ் ஜக்கேஷ் ஓட்டிவந்த கார் திடீரென நிலை தடுமாறி உருண்டு விபத்துக்குள்ளானது.

    அதிர்ஷ்டவசமாக நடிகர் குருராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7ஜி ரெயின்போ காலனி படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து ஹீரோவாக பிரபலமானவர் குருராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

    சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம்! சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம்!

    கார் விபத்து

    கார் விபத்து

    பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் மகனும் கன்னட நடிகருமான குருராஜ் ஜக்கேஷ் ஓட்டி வந்த கார் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹைதராபாத் ஹைவேயில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதிர்ஷ்டவசமாக

    அதிர்ஷ்டவசமாக

    அதிர்ஷ்டவசமாக நடிகர் குருராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் ஓட்டி வந்து விபத்துக்குள்ளான காரின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குருராஜுக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ரெயின்போ காலனி ரீமேக்

    ரெயின்போ காலனி ரீமேக்

    தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி படத்தில் நடித்து ஹீரோவாக கன்னட திரையுலகில் பிரபலமானவர் குருராஜ்.

    ரசிகர்கள் பிரார்த்தனை

    ரசிகர்கள் பிரார்த்தனை

    ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக நடிகர் குருராஜை சிலர் கத்தியால் குத்தியது பரபரப்பை கிளப்பியது. 8 தைல்கள் போட்ட நிலையில், குருராஜ் அப்போதும் உடல் நலம் தேறி மீண்டும் நடிக்க வந்தார். லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சினிமா சம்பந்தமாக காரில் சென்ற நிலையில் குருராஜுக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை.

    English summary
    Popular Kannada actor Gururaj Jaggesh met with a car accident in Bangalore – Hyderabad highway.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X