பிரபல நடிகர் 'கன்னடத்து பாக்யராஜ்' மறைவு!

By Vignesh Selvaraj

Recommended Video

'கன்னடத்து பாக்யராஜ்' மறைவு!

பெங்களூர் : பிரபல கன்னட இயக்குனரும், நடிகருமான காசிநாத் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காசிநாத் உயிரிழந்துள்ளார்.

இவர் கன்னடத்து பாக்கியராஜ் என்று அழைக்கப்பட்டவர். இவரது மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் காசிநாத்

நடிகர் காசிநாத்

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் கன்னடப் படங்களும் தமிழில் டப் ஆகி வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றன. அவற்றில் 80-களில் வந்த 'முதல் இரவே வா வா' ஆகிய படம் முக்கியமானது. இந்தப் படத்தை இயக்கி, நாயகனாக நடித்தவர் காசிநாத்.

கன்னடத்து பாக்யராஜ்

கன்னடத்து பாக்யராஜ்

'அடல்ட் காமெடி' படமாக அப்போது வெளிவந்த 'முதல் இரவே வா வா' தமிழிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. இவர் பாக்யராஜின் 'அந்த 7 நாட்கள்', 'சின்ன வீடு' போன்ற படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து அதில் நடித்து புகழ் பெற்றவர். இதனால், 'கன்னடத்து பாக்யராஜ்' எனவும் அழைக்கப்பட்டார்.

40 படங்களுக்கும் மேல் நடிப்பு

40 படங்களுக்கும் மேல் நடிப்பு

கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் காசிநாத். 40 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். 80-களில் முன்னணி கன்னட நடிகர்களில் ஒருவராக விளங்கியவர்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா. இவர் தமிழில் விஷால், நயன்தாரா ஆகியோர் நடித்த 'சத்யம்' படத்தில் நடித்துள்ளார். 11 கன்னடம், 3 தெலுங்கு மற்றும் 1 இந்தி படத்தைத் தயாரித்து உள்ளார். இவர் கடைசியாக 'சவுக்கி' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

காசிநாத் மறைவு

காசிநாத் மறைவு

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிநாத் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். காசிநாத்தின் மறைவுக்கு கன்னடத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X