twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜய் தேவ்கான் என்னை அழைத்து பேசியிருக்கலாம்..இந்தி சர்ச்சை குறித்து மனம் திறந்த கிச்சா!

    |

    சென்னை : கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் கிச்சா, கேஜிஎஃப் வெற்றி குறித்து இந்தி சர்ச்சை குறித்து பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்தார்.

    நடிகர் கிச்சா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ஜூன் 28ந் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தில் நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    என்னது விக்ரம் 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஆசைப்பட்டாரா? டிரெண்டாகும் த்ரோபேக் பேட்டி! என்னது விக்ரம் 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஆசைப்பட்டாரா? டிரெண்டாகும் த்ரோபேக் பேட்டி!

    கன்னட நடிகர் கிச்சா சுதீப்

    கன்னட நடிகர் கிச்சா சுதீப்

    கன்னட நடிகரான கிச்சா சுதீப் 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தில் நடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக வெளியாக இத்திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனுஷ் நேற்று வெளியிட்டு இருந்தார். மிரட்டலாக வெளியான இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிச்சா சுதீப். பல கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்தார்.

    சண்டையோ , பிரச்சனையோ இல்லை

    சண்டையோ , பிரச்சனையோ இல்லை

    அதில் செய்தியாளர் ஒருவர், இந்தி சர்ச்சை குறித்து அஜய்தேவ்கனுடன் எழுந்த சண்டை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கிச்சா, இது சண்டையோ , பிரச்சனையோ இல்லை, என்னுடைய ட்வீட்டை நீங்கள் படிக்கும் போது 'பேட் மூடில்' இருந்ததால் அது சர்ச்சையாகி விட்டது. அஜய் தேவ்கன் என்னுடைய நண்பர் தான், அவர் என்னை போஃனில் அழைத்து பேசி இருக்கலாம். அதைவிட்டு விட்டு, பப்ளிக் போனில் கேள்வி கேட்டால், நானும் அதே பப்ளிக் போஃனில் தான் பதில் சொல்ல முடியும் அப்படி வந்த பதில் தான் அது என்றார்.

    நல்ல கதைக்காக காத்திருந்தேன்

    நல்ல கதைக்காக காத்திருந்தேன்

    நான் ஈ, புலி படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என ஒரு செய்தியாளர் கேட்க. என்ன காரணம் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் பல திறமையான பல நடிகர்கள் இருக்கிறார் இதனால், நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்து இப்போது 'விக்ராந்த் ரோணா' படத்தின் மூலம் வந்து இருப்பதாக கூறினார்.

    4 ஆண்டு உழைப்பு

    4 ஆண்டு உழைப்பு

    'விக்ராந்த் ரோணா' திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து இருக்கிறோம். கதை எழுத ஒரு வருடம், கதை பற்றி விவாதிக்க நடிகர், நடிகையர் தேர்வுக்கு ஒரு வருடம், படப்பிடிப்புக்கு இரண்டு வருடம் என கிட்டத்தட்ட நான்கு வருட உழைப்பின் பின் தற்போது இந்த படம் ஜூன் 28ந் தேதி வெளியாக உள்ளது. கன்னட திரைப்படங்கள் கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில் 'விக்ராந்த் ரோணா' நிச்சயம் மனதை தொடும் திரைப்படமாக இருக்கும் என்றார்.

    English summary
    Kannada actor Kiccha Sudeep spoke openly about the controversy with Ajay Devgn
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X