கன்னட நடிகர் நிகிலுக்கு.. நாளை திட்டமிட்டபடி திருமணம்.. இருவீட்டார் மட்டுமே பங்கேற்பு !
சென்னை : கன்னட நடிகர் நிகிலின் திருமணம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில். இவரும் தந்தையுடன் அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, இவர் "ஜாகுவார்" என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் சிறப்பாக ஓடி நல்ல வெற்றியை நிகிலுக்கு பெற்றுத்தந்தது.

இதையடுத்து, நிகிலுக்கும், ரேவதி என்ற பெண்ணிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகராவில் திருமணம் நடத்த பெரியோர்களால் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, கொரோனாவின் தீவிரம் காரணமாக ஊரடங்கு போன்ற பல பிரச்சனைகளில் அனைத்து பணிகளும் முடங்கின. ஆனால், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்திவிடலாம் அதற்குள் ஊரடங்கு முடிந்துவிடும் என்று எண்ணிய நிலையில் 2ம் கட்ட ஊரடங்கு பிறப்பித்து மே3ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் திருமணத்தை எவ்வாறு எப்படி நடத்துவது, இல்லை திருமணத்தை ஒத்திவைத்துவிடலாமா என்று யோசித்து வந்தனர்.

இந்நிலையில், குறித்த தேதியில் திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு எடுத்து விட்டனர். ராம்நகராவில் உள்ள பண்ணை வீட்டில் இவர்களது திருமணம் செய்ய ஏற்பாடுகள் முழுமையாக நடந்து வருகின்றது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அனைத்தும் முடிவுக்கு வந்த பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து, இருவீட்டாரும் திருமண வேலைகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











