39 வயதில் மாரடைப்பு.. பிரபல கன்னட நடிகர் மரணம்.. சோகத்தில் திரைத்துறை!

பெங்களூர் : கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 39.

பல தொலைக்காக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள நிதின் கோபி, இல்லத் தரசிகளுக்கு பிடித்தமான நடிகராக இருந்தார்.

இந்த இளம் வயதிலேயே இவர் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

kannada actor nithin gopi passes away

ஹலோ டாடி : கன்னடத்தின் மூத்த நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனின் மகனான நிதின் கோபி ஹலோ டாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி, நிஷப்தா, சிரபந்தவ்யா உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார்.

சீரியலில் : மேலும் ஸ்ருதி நாயுடு தயாரித்த புனர் விவாஹா என்ற தொலைக்காட்சி தொடரில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் நல்ல கதைக்களத்துடன் இருந்ததால் டிஆர்பியில் முதல் இடம் இடத்தில் இருந்தது. இந்த தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வாய்ப்புகள் வரத்தொடங்கின.

உயிரிழந்தார் : இந்நிலையில், நடிகர் நிதினுக்கு வெள்ளிக்கிழமை வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதின் கோபியை அவரது குடும்பத்தினர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அஞ்சலி : நிதின் கோபியின் திடீர் மறைவு கன்னட திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கன்னட திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமார், லக்ஷ்மண், மந்தீப் ராய், புல்லட் பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X