Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு!
சென்னை: லாக்டவுன் காரணமாக வேலையிழந்து வீடு கூட இல்லாமல் பெங்களூரில் குடும்பத்துடன் தவித்த நபரை பிரபல நடிகர் விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த சம்வம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் தொழில் துறை முடங்கியுள்ளது. பலரும் வேலையிழந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
உடல் நிலை சரியில்லாமல் இருந்த.. பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

ஊர் திரும்ப முடியாமல்
அப்படி தவித்து வரும் மக்கள் சிலர் சொந்த ஊருக்கு செல்வதுதான் ஒரே வழி என நடை பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். சிலர் ஊர் திரும்ப முடியாமல் கிடைக்கும் உணவை உண்டும், இருக்கும் இடத்தில் தங்கியும் விடியலுக்காக காத்திருக்கின்றனர்.

நடிகர் சோனு சூட்
அப்படி தவிக்கும் மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த பல புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

நடிகர் சப்யாசச்சி மிஷ்ரா
இந்நிலையில் சோனுவை போல பெங்களூரில் தவித்த ஒரு குடும்பத்தை சொந்த ஊரான ஒடிஷா மாநிலத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் சப்யாசச்சி மிஷ்ரா. ஒடிஷா மாநிலம் பாலாங்கீர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாழ்வாதாரத்தை தேடி ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்தார்.

தாயாருக்கு உடல்நலக்குறைவு
பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு லாக்டவுன் காரணமாக வேலை பறிபோனது. இதனால் கையில் இருந்து காசை வைத்து தாய், மனைவி மற்றும் 4 குழந்தைகளின் பசியையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பிரதீப்பின் தயாருக்கு திடீரென ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்தது. இதனால் மருத்துவ செலவு, அப்படி இப்படி என கையில் இருந்த பணமும் காலியானது.

போட்டோ வைரல்
இதனால் வாடகை கொடுக்க முடியாமல் போனதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்ல, குடும்பத்துடன் கேஎஸ்ஆர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார் பிரதீப். அவர் பாரலைஸ்டால் பாதிக்கப்பட்ட தாய், மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அறை உணவு
இந்த விவகாரம் இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவரின் கவனத்துக்கு செல்ல, அவர் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸின் நிவாரணக்குழு தலைவர் ஆஷிக்குக்கு தெரியப்படுத்தினார். இதனை தொடர்ந்து ஆஷிக் மற்றும் அவரது குழுவினர் பிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு ஒரு அறையில் தங்க வைத்து இரண்டு நாட்கள் உணவு வழங்கினர்.

விமானம் மூலம் செல்ல
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் சப்யாசச்சி மிஷ்ரா, பிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்கு விமானம் மூலம் செல்ல உதவினார். பிரதீப் தாயார் நீண்ட நேரம் பேருந்திலோ அல்லது டிரெயினிலோ அமர்ந்து செல்ல முடியாது என்பதால் விமானம் மூலம் செல்ல ஏற்பாடு செய்தார்.
Recommended Video

ரூ. 80000 செலவு
இதனை தொடர்ந்து நேற்று மாலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் ஒடிசாவுக்கு சென்றனர். அவர்கள் 7 பேரும் விமானத்தில் செல்ல டிக்கெட் கட்டணமாக 80000 ரூபாய் செலவானதாக தெரிகிறது. விமானத்தில் செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப், தான் முதல் முறையாக விமானத்தில் செல்ல உள்ளதால் பதற்றமாக இருப்பதாகவும் அதே நேரத்தில் தனது குழந்தைகள் விமானத்தில் செல்லவதால் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.