முதல்வர் ஸ்டாலினை மனைவியுடன் சென்று சந்தித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்.. என்ன விஷயமா இருக்கும்?
சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ள புகைபப்டங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் மறைந்த நடிகருமான புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், எந்த விஷயத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்கிற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.
முன்னதாக புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புனீத் ராஜ்குமார் மறைவு
கன்னட திரையுலகினர் அப்பு என அன்போடு அழைத்து வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை திரையுலகில் ஏற்படுத்தியது. நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவரது சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் மரியாதை
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருந்தார். மிக சீக்கிரமாக இவ்வளவு பெரிய மாஸ் நடிகர் மறைந்து விட்டது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் மனம் உருகியிருந்தார்.

தமிழில் வெளியாகும் ஜேம்ஸ்
இதுவரை கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் எந்தவொரு திரைப்படமும் தமிழில் வெளியானது இல்லை. இந்நிலையில், முதன்முறையாக தமிழில் டப் செய்யப்பட்டு ஜேம்ஸ் திரைப்படம் வரும் மார்ச் 17ம் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல்வரை சந்தித்த சிவராஜ்குமார்
இந்நிலையில், இன்று (பிப்., 13) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதா சிவராஜ்குமார் உடன் இணைந்து வந்து சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள நினைவு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்களா? அல்லது ஜேம்ஸ் பட ரிலீஸ் விவகாரம் குறித்து சந்தித்தார்களா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சந்திப்பு ஏன்
முதல்வர் ஸ்டாலினை கன்னட நடிகர் சிவராஜ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா? அல்லது சினிமா ரீதியான சந்திப்பா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல கோணங்களில் கேள்விகள் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











