புற்றுநோய்க்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை.. நிச்சயம் திரும்பி வருவேன்.. உருக்கமாக பேசிய நடிகர்!

சென்னை: கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சைக்காக 18ந் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார் டிசம்பர் 24 ஆம் தேதி தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்றார்.

கன்னட நடிகரான சிவராஜ்குமார், தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறியிருந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களுரில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்றுநோய் என்று சொன்னதும் அனைவரும் பயந்து பதற்றமடைந்துவிட்டார்கள், எனக்கும் பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால், அனைத்து பரிசோதனையும் எடுத்ததில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார். ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் என்மீது வைத்து இருக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.

shiva rajkumar cancer

மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 24 ஆம் தேதி எனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. மருத்துவர் முருகேஷ் என் மனோகர் தான் எனக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறார்.அவர் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான புற்றுநோயியல் நிபணர் ஆவார். அவர் நல்ல கைராசியான மருத்துவர் தான் இதனால், யாரும் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். சுமார் ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி அனைத்து சிகிச்சைகளையும் முடித்துவிட்டு ஜனவரி 26ந் தேதி இந்தியாவுக்குத் திரும்ப இருக்கிறேன். நிச்சயம் நான் திரும்பி வருவேன். என்னுடன் மனைவி கீதாவும் என் இளைய மகள் நிவேதிதாவும் என்னுடன் வருவார்கள். யாரும் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றார்.

சிவ ராஜ்குமாரின் பைரதி ரணங்கள் நவம்பர் 15ந் தேதி வெளியாகி நல்ல வருசூலைவ அள்ளி வருகிறது. தற்போது உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட உட்பட பல படங்களில் பணிபுரிந்து வருகிறார், மேலும் ராம் சரணின் RC 16 படத்திலும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X