சித்தார்த்தை பேசவிடாமல் வெளியேற்றிய கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்!

சென்னை: சித்தா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார்.

சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளில் நேற்று வெளியானது.

இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்துள்ளனர்.

Kannada actor Shivarajkumar apologized to tamil actor Siddharth

சித்தார்த்தின் சித்தா: பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் சித்தா. நேற்று வெளியானத் இத்திரைப்படம் முதல் நாளில் ரூ.1 முதல் ரூ.2.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,தொடர் விடுமுறை இருப்பதால், படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியேறிய சித்தார்த்: நேற்று சித்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பெங்களுரில் நந்து கொண்டு இருந்தது. அப்போது சித்தார்த் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர், காவேரி நதிநீர் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது, இது தேவையா என்றும், தமிழ்நாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சித்தார்த்தை பேசவிடாமல் இடையூறு செய்தி நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றினர்.

மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்: இந்த விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவரும், அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலமான சிவராஜ்குமாரும் சித்தார்த்திடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக கூறியிருக்கிறார்.

வருத்தமளிக்கிறது: இது குறித்து அவர் பேசும் போது, சித்தா திரைப்பட நிகழ்ச்சியில் இருந்து கன்னட அமைப்பினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு நடிகர் சித்தார்த்திடம் நான் மன்னிப்புக்கேட்கிறேன். இப்படி ஒரு சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. கன்னட மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள், அனைத்து மொழிப் படங்களையும் விரும்பி பார்க்கக்கூடியவர்கள் என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X