பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார்.. திரையுலகினர் அதிர்ச்சி!
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கன்னட நடிகரான விஜய் ராகவேந்திரா 1982ம் ஆண்டு சாலிசுவ மொதகலு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

பின் சின்னாரி முத்தா மற்றும் கோட்ரேஷி கனசு ஆகிய படங்களில் நடித்தார். இதில் கோட்ரேஷி கனசு திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
நடிகர் விஜய் ராகவேந்திரா: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் ராகவேந்திரா, 2002ம் ஆண்டு ராமோஜி ராவின் தயாரிப்பில் நினககி என்ற படத்தில், ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஸ்பந்தனாவை மணந்தார்: இவர் கடந்த 2007ம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செளர்யா என்கிற ஒரு மகன் இருக்கிறார். இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கிய அபூர்வா படத்தில் ஸ்பந்தனா ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். நடன கலைஞரான இவர் பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து இருக்கிறார்.
திடீர் மறைவு: இந்நிலையில், நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ஸ்பந்தனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்பந்தனா உயிரிழந்துள்ளார். இவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இறுதிச்சடங்கு: இந்த ஜோடி இந்த மாதம் 26ந் தேதி தங்களது 16வது திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில், நடிகர் விஜய் ராகவேந்திராவிற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். மேலும், ஸ்பந்தனின் உடல் நாளை பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்ட பின், நாளை மறுதினம் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications











