உலக சாதனை செய்த ரசிகர்கள்.. மெய் சிலிர்த்த யாஷ்.. எனது பலமே உங்களது அன்பும் தான்!

பெங்களுர் : பிரபல கன்னட நடிகர் யாஷ் ரசிகர்கள் உலக சாதனை செய்ததை அடுத்து அவர்களுக்கு யாஷ் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

பிரபல கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளனது.

ராக்கி பாய்

ராக்கி பாய்

ஒரு நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்குவது எது என்றால், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான். கன்னட நட்சத்திரம் யாஷ் ராக்கி பாய் என்ற பெயர் நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது. கேஜிஎஃப் சாப்டர் 2, யாஷின் ரசிகர் பட்டாளத்தை உலகம் முழுவதும் பன்மடங்காக்கி உள்ளது. கேஜிஎஃப் 2 படத்தைப்பார்த்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர்.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்யை யாஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

மாஸ் ஹீரோ

கன்னட சினிமாவின் பிராண்ட அம்பாஸிட்டராக உருவெடுத்திருக்கிறார் யஷ். 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அவர் வரும் ஒவ்வொரு காட்சியில் திரையில் ஒரு பிரளையத்தை ஏற்படுத்தி மிரட்டுகிறது. நீளமான தாடியும், வாட்டசாட்டமான தேகம் என இளம் ரசிகைகளின் மாஸ் ஹீரோவாக மனதில் பதிந்துள்ளார்.

ரசிகர்கள் உலக சாதனை

ரசிகர்கள் உலக சாதனை

இந்நிலையில், யாஷின் ரசிகர்கள் 25 ஆயிரத்து 650 சதுர அடியில் யாஷின் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். அகில கர்நாடக ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்கள் சங்க உறுப்பினர்கள் 25,650 சதுர அடி பரப்பளவில் 2,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு, 135×190 அடியில் போஸ்டரை உருவாக்கி உள்ளனர். இந்தப் போஸ்டரானது உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. ரசிகர்கள் உருவாக்கிய வீடியோவை நடிகர் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எனது ரசிகர்கள்தான் எனக்கு பலம். உங்களது அன்பும், ஆதரவும்தான் எனது வலிமை. இந்த உலகம் நமக்கானது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X