தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 25 வயது ரசிகர்.. கடுப்பான கேஜிஎஃப் நாயகன்.. என்ன சொன்னாரு தெரியுமா?
பெங்களூரு: கேஜிஎஃப் நடிகர் யஷ்ஷின் ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடைசியாக தனது தற்கொலை குறிப்பில் கேஜிஎஃப் நடிகர் யஷ் மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமைய்யா தனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அறிந்த கேஜிஎஃப் நாயகன் யஷ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

தூக்கிட்டு தற்கொலை
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கொடிடோடி கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ராமகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கர்நாடகாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தற்கொலை கடிதம்
மறைந்த ராமகிருஷ்ணன் தனது தற்கொலை கடிதத்தில் தனது வாழ்வில் எல்லாமே தோல்வியில் முடிந்ததாகவும், இனியும் தன்னால் இந்த உலகில் வாழ முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் நடிகர் யஷ் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் ரசிகன் என்றும் இருவரும் தனது இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அஞ்சலி செலுத்திய சித்தராமைய்யா
இந்த விவாகரம் கர்நாடகா முழுவதும் பரவிய நிலையில், முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா இளைஞரின் இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்பு வரை இவர் யாரென்றே தெரியாது. ஆனால், முதன்முறையாக இப்படியொரு ரசிகர் இருப்பதை இது போன்ற நிலையிலா பார்க்க வேண்டும் என உருகி உள்ளார்.

கடுப்பான யஷ்
அந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத நடிகர் யஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களின் கைதட்டல்களும், விசில் சத்தங்களும் தான் எங்களை ஊக்குவிக்க வேண்டும், நாங்கள் உங்களிடம் இருந்து காண விரும்புவதும் அதைத்தான். 25 வயதில் அப்படி என்ன வாழ்க்கை வெறுத்து விட்டது என்று இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என தனது கோபத்தை வெளிப்படுத்தி ட்வீட் போட்டுள்ளது கன்னட திரையுலகில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











