வெறும் 300 ரூபாய் மட்டுமே கையில் இருந்தது...’ராக்கிபாய்’ யாஷ் சொன்ன நன்றி

சென்னை : கேஜிஎப் 2 பட வெற்றிப்படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வீடியோ மூலம் நடிகர் யாஷ் நன்றி தெரிவித்துள்ளார் .

Recommended Video

Yashஐ Rocky Bhaiயாக தெரியும்...ஆனால் இப்படி யாருக்காவது தெரியுமா ?|Filmibeat Tamil

"யாஷ்" என்ற பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இமாலய உச்சத்திற்கு சென்று விட்டார் யாஷ்.

நவீன்குமார் என்ற இயற்பெயர் கொண்ட யாஷ், ஒரே ஒரு கனவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருந்தார். அது நடிகராக வேண்டும் என்ற வெறித்தனமான கனவு.

300 ரூபாயுடன்

300 ரூபாயுடன்

நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் கனவு கலைந்து, காணாமலே போய்விடும். ஆனால், யாஷ் தன்னுடைய தன்னம்பிக்கையால் வாழ்க்கையோடு போராட வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடிவந்தார். அவருக்கு வாழ்க்கை அளித்தது பெங்களுரில் உள்ள நாடக கம்பேனி.

உலகமே வியந்து பார்க்கும் இடத்தில்

உலகமே வியந்து பார்க்கும் இடத்தில்

ஸ்டாராக ஆசை மட்டும் இருந்தால் போதாது, உழைக்க வேண்டும் என்ற மன திடத்துடன் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து படிப்படியாக தன்னை தயார்படுத்திக் கொண்டார். பல கட்டபோராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பல சோதனைகள், பல அவமானங்கள், பல கேலிப் பேச்சுகள் அனைத்தையும் கடந்து இன்று உலகமே வியந்து பார்க்கும் உயர்ந்த இடத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார் யாஷ்.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார்.

ஹவுஸ்புல் காட்சிகள்

ஹவுஸ்புல் காட்சிகள்

ஏப்ரல் 14ந் தேதி வெளியான கே.ஜி.எஃப் பார்ட் 2 அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 8 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.735.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் கே.ஜி.எஃப் கோடி கிளப்பில் இணைய உள்ளது.

தன்னம்பிக்கை வெற்றி பெறலாம்

தன்னம்பிக்கை வெற்றி பெறலாம்

பலரும் யாஷிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில், யாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்ததால் மழைக்காக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்தனை கூடத்துக்கு வரும்போது ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அந்த சிறுவனை பார்த்த அனைவரும் முட்டாள்தனம் என்றும் ஓவர்கான்ஃபிடன்ஸ் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த சிறுவன் செய்ததற்குப் பெயர்தான் நம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி அடையலாம் என்று கூறினார்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

மேலும் நான் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கு அன்பை வாரி இறைத்த அனைத்து ரசிகர்களுக்கும் கேஜிஎப் டீம் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். யாஷின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Read more about: யாஷ் yash kgf
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X