ஹோட்டலில் விபச்சாரம் செய்ய முயன்றதாக கன்னட நடிகை கைது
ஹோட்டலில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட முயன்றதாக கூறி கன்னட நடிகை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நடிகைக்கு வயது 29. சில கன்னடப் படங்களிலும், 3 டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை. இவர் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட முயன்றதாக கூறி கைது செய்துள்ளனர். அவருடன் 40 வயது பெண்மணி ஒருவரும், மேலும் இருவரையும் போலீஸார் பிடித்துள்ளனர். அந்தப் பெண்மணி புரோக்கரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் விபச்சாரத்திற்கு துணை புரிந்து ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது. இவரும் ஒரு டிவி நடிகைதான்.
சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்து அங்கு விரைந்தபோது மேற்கண்ட அனைவரும் அங்கிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அனைவரையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.


Click it and Unblock the Notifications











