நிர்வாண புகைப்படத்தை காட்டி ரூ.30 லட்சம் கேட்டு கன்னட நடிகைக்கு மிரட்டல்.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கைது

பெங்களூரு : கன்னட படங்களில் நாயகியாக அறிமுகமாகி தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் நடிகைக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே அவரின் உறவினரும் மேக்கப் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த நபரை இந்த விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னட நடிகைக்கு மிரட்டல்

கன்னட நடிகைக்கு மிரட்டல்

கன்னட படங்களில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நாயகியாக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் சாண்டல்வுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த நிலையில், மிரட்டல் விடுத்தவரை அவர்கள் கைது செய்துள்ளனர்.

ரூ 30 லட்சம் கேட்டு மிரட்டல்

ரூ 30 லட்சம் கேட்டு மிரட்டல்

முன்னதாக தன்னுடைய முழு மற்றும் அரை நிர்வாணப் படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் உடனடியாக 30 லட்சம் ரூபாயை தந்தால் மட்டுமே அதை ஷேர் செய்யாமல் இருப்பேன் என்றும் அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடிகை, அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கைது

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கைது

ஆனால் அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நடிகையின் நெருங்கிய உறவினரும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான மஹன்டேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

போலீசார் நடவடிக்கை

போலீசார் நடவடிக்கை

அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த நிர்வாண புகைப்படங்களை அழித்துள்ளனர். முன்னதாக நடிகையின் செல்போனிலிருந்து பாஸ்வேர்டை எடுத்த அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட், அதிலிருந்து அந்தப் புகைப்படங்களை தன்னுடைய செல்போனுக்கு மாற்றியதாக தெரிகிறது.

மொபைலிலிருந்து புகைப்படங்கள் திருட்டு

மொபைலிலிருந்து புகைப்படங்கள் திருட்டு

இத்தகைய நிர்வாண மற்றும் அரைநிர்வாண புகைப்படங்களை எடுத்து ஒரு மொபைல் ஆப் மூலம் அந்த நடிகை அதிகமான பணத்தை பெற்றது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தன்னுடைய மொபைலை சூட்டிங்கின்போது அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் கொடுத்துவிட்டு நடிகை சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துரிதமாக செயல்பட்ட போலீசார்

துரிதமாக செயல்பட்ட போலீசார்

தன்னுடைய உறவினர் என்ற நம்பிக்கையில் அந்த நடிகை, சூட்டிங்கின்போது, தன்னுடைய மொபைல் போனை அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். ஆனால் பண ஆசையில் அவர் அதை தவறாக பயன்படுத்து, அவரது மொபைலின் பாஸ்வேர்டை திருடி, அவரது புகைப்படங்களையும் திருடியுள்ளார். இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X