தங்க கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவின் பல கோடி சொத்து முடக்கம்!
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, நடிகையின் ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
நடிகை ரன்யா ராவ், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பிற்கு ஜோடியாக 'மாணிக்யா' படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். இவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்து வந்ததால், டிஆர்ஐ இவரை கண்காணித்து வந்தனர். அவர், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்தும், கண்ணுக்குத் தெரியாத படி தங்கத்தை கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூர் வந்த நடிகை ரன்யா ராவின் உடமைகளை பறி சோதனை செய்தனர். அதில், இருந்த 14.8 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

நடிகை ரன்யா ராவ்: இவர், கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்க பயன்படுத்தி விமான நிலையத்தில், பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி தங்கத்தை கடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை விமான நிலையத்திற்கு வந்தவுடன், ரன்யா டிஜிபியின் மகள் என்று கூறி, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை உடன் போலீசார் செல்வதால், விமான நிலைய போலீசார் இவரை கண்டு கொள்ளவில்லை. இதன் பின் டிஆர்ஐ அதிகாரிகள் நோட்டமிட்டு இவரை சரியான நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர்.
சொத்துக்கள் முடக்கம்: அதன் பின், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகையின் வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











