கன்னட நடிகை சோபிதா சிவான்னா திடீர் மரணம்.. தற்கொலையா என போலீஸ் விசாரணை!

ஐதராபாத்: சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகை சோபிதா சிவான்னா ஐதராபாத்தில் திடீரென மரணமடைந்துள்ளார். கடந்த ஆண்டில் இவருக்கு திருமணமாகி ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வந்த நிலையில் இவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சோபிதா சிவான்னாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கர்நாடகாவில் வசித்துவந்த நிலையில் தகவல் கேள்விப்பட்டு அவர்கள் உடனடியாக ஐதராபாத் விரைந்துள்ளனர். இவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கன்னட சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துவந்த இவர் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில் தற்போது இவருடைய மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

shobitha shivanna hyderabad

கன்னட நடிகை சோபிதா சிவான்னா: கன்னடத்தில் முன்னணி சீரியல் நடிகையாக அதிகமான சீரியல்களில் கமிட்டாகி நடித்துவந்த நடிகை சோபிதா சிவான்னா ஐதராபாத்தில் மரணமடைந்துள்ளார். இவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரம்மகந்து உள்ளிட்ட சீரியல்கள் மூலம் ஏராளமான கன்னட ரசிகர்களை கவர்ந்த சோபிதா, மற்ற மொழிகளிலும் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துவந்த நிலையில் அவரது மறைவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கடந்த ஆண்டில் மே 22ம் தேதி திருமணம் நடந்த நிலையில் ஐதராபாத்தில் தன்னுடைய கணவருடன் அவர் வசித்து வந்தார்.

சோபிதா சிவான்னா தற்கொலை?: ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் அடுத்தடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்ததாக இவரது நடிப்பில் முதல் நாள் முதல் காட்சி படம் ரிலீசாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடையே உற்சாகத்தை பகிர்ந்திருந்தார்.முன்னதாக தீபாவளி வாழ்த்துக்களையும் அவர் கூறிய நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உறவினர்கள் அதிர்ச்சி: திருமணத்திற்கு பிறகு நடிப்பதை அவர் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் தெரிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஐதராபாத் விரைந்துள்ளனர். சோபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெங்களூருவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சோபிதா, தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினார். பெங்களூருவில் இருந்தபடி அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்தார்.

12க்கும் மேற்பட்ட சீரியல்கள்: சித்தப்பா, மங்களகௌரி, கோகிலே, பிரம்மகந்து, கிருஷ்ண ருக்மணி, மனேதேவா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், கன்னட சினிமாவிலும் இரண்டு, மூன்று படங்களில் நடித்துள்ளார். சீரியல்களில் நடிப்பதற்கு முன்னதாக ஆங்கராகவே இவர் தன்னுடைய கேரியரை துவங்கினார். இதையடுத்தே அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. முன்னதாக தான் நடிகையாவேன் என்று நினைக்கவில்லை என்று பேட்டியொன்றில் கூறியுள்ள இவர், சிறு வயதிலேயே நடனத்தில் அதிக ஆர்வம் காட்டியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X